×

அரிசி ஏற்றுமதி தடை விவகாரம் விலக்கு கேட்கும் சிங்கப்பூர்

சிங்கப்பூர்: அரிசி ஏற்று தடை விஷயத்தில் சிங்கப்பூருக்கு விலக்கு அளிக்க வேண்டும் என அந்த நாடு கோரியுள்ளது. வெளிநாடுகளுக்கு பாஸ்மதி அல்லாத அரிசி ஏற்றுமதி செய்வதற்கு கடந்த 20ம் தேதி ஒன்றிய அரசு தடை விதித்தது. நாட்டில் விலையை கட்டுப்படுத்துவதற்கு இந்நடவடிக்கை மேற்கொண்டதாக அரசு தெரிவித்தது. இதனால், ஆப்பிரிக்க நாடுகள்,துருக்கி, சிரியா,சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் அரிசிக்காக கடைகளில் காத்து நிற்கின்றனர்.

30 நாடுகளில் இருந்து சிங்கப்பூர் அரிசி இறக்குமதி செய்கிறது. இறக்குமதி செய்யப்படும் அரிசியில் 40 சதவீதம் இந்தியாவில் இருந்து கொண்டு வரப்படுகிறது. சிங்கப்பூரில் ஏராளமான இந்தியர்கள் வசித்து வருகின்றனர். இந்தியா தடை விதித்துள்ளதால் சிங்கப்பூர் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில், சிங்கப்பூர் உணவு ஏஜென்சி அதிகாரி கூறுகையில், ‘‘ வேறு பல இடங்களில் இருந்து அரிசி வாங்குவதற்கு முயன்று வருகிறோம்.மேலும், ஏற்றுமதி தடையில் இருந்து சிங்கப்பூருக்கு விலக்கு அளிக்க வேண்டும் என இந்திய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

The post அரிசி ஏற்றுமதி தடை விவகாரம் விலக்கு கேட்கும் சிங்கப்பூர் appeared first on Dinakaran.

Tags : Singapore ,Dinakaran ,
× RELATED பலத்த சூறைக்காற்று காரணமாக பெங்களூரு...